ஐ.பி.எல் - 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

0 2942

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற 53-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை சார்பில் டு பிளஸ்ஸி (du Plessis) 76 ரன்கள் எடுத்தார்.

எளிய இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணி 13 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 42 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 5ஆவது இடத்துக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments