கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற அறநிலையத் துறைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செப்டம்பர் 22ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தில் மட்டும் தலையிட முடியுமே தவிர மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்குவது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் தடை கோரி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments