மைசூர் அரண்மனையில் தசரா விழா கோலாகலமாக தொடக்கம் ; அரண்மனைக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை
கர்நாடக மாநிலம் மைசூரில் உலகப் புகழ் பெற்ற தசரா விழா தொடங்கியது. மக்களைக் கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசூரனைச் சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளை மைசூரில் தசரா விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
411ஆவது ஆண்டாக நடைபெறும் தசரா விழாவை முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்குப் பூசைகள் செய்து தொடங்கி வைத்தார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் அம்மனுக்குப் பூசைகள் செய்தார்.
தசராவை விழாவையொட்டி அரண்மனைக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் அதிகாரிகள், கலைஞர்கள் கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments