இலக்கியத்திற்கான நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிப்பு
இந்தாண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்ணாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளின் துயரத்தையும்,காலனி ஆதிக்கத்தின் விளைவுகளையும் சமரசமற்ற வகையில் தனது எழுத்துக்கள் மூலம் சித்தரித்தமைக்கான குர்ணாவிற்கு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தான்சானியாவில் பிறந்த குர்ணா, அகதியாக இங்கிலாந்து சென்று அங்கு குடியேறியவர்.
தனது 21ஆவது வயதில் இருந்து ஆங்கில இலக்கியங்களை படைத்து வரும் குர்ணா, 10 நாவல்கள் மற்றும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். புலம்பெயர்ந்து அகதிகளாக செல்வோரின் வாழ்வில் ஏற்படும் துயரங்களை குர்ணா தனது நாவல்களில் விவரித்துள்ளதாக நோபல் பரிசு தேர்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.
Comments