பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
திருவாரூர் அருகே பட்டா மாறுதலுக்கு 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்த மனோஜ்பாபு என்பவர் புதிதாக வாங்கிய நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியிடம் விண்ணப்பித்த நிலையில் அவர் 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மனோஜ்பாபு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெற்ற பாலசுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
Comments