போலி சான்றிதழ் மூலம் பணியமர்த்திய விவகாரம் ; திருவள்ளுவர் பல்கலை. முன்னாள் பதிவாளர் வீடுகளில் சோதனை
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், போலி சான்றிதழ்கள் கொடுத்த ஊழியர்களைப் பணியமர்த்தியதாக எழுந்த புகாரில், முன்னாள் பதிவாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் பணிபுரிந்த அசோகன், கடந்த 2015-ம் ஆண்டு, போலி ஆவணங்களைத் தயாரித்து, 6 பேரை பல்கலைக் கழக ஊழியர்களாகப் பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது.
புகார் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அசோகன் மற்றும் அவரால் பணியமர்த்தப்பட்ட ஆனந்தபாபு, எழிலரசி, ஜெயந்தி, விஜயகிருஷ்ணன், தசரதன், அன்பரசன் ஆகிய 7 பேர்மீது வேலூர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள அசோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல, திருவாரூர் மாவட்டம் மேல எருகாட்டூரில் உள்ள அசோகனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
Comments