மூன்றாகப் பிரிக்கப்பட்ட பெருநகர சென்னை காவல் ஆணையரகம் … இடைக்கால வரைபடங்கள் வெளியீடு

0 5534
சென்னை, தாம்பரம், ஆவடி: காவல் ஆணையரகங்களின் எல்லைகள்

பெருநகர சென்னை காவல் ஆணையரகம், மூன்றாகப் பிரிக்கப்படும் நிலையில், அவற்றிற்கான காவல் எல்லைகள், ஆணையரக அலுவலகங்களை குறிக்கும் இடைக்கால வரைபடங்கள் வெளியாகியுள்ளன. 

 தாம்பரம் காவல் ஆணையரக சிறப்பு அதிகாரி ரவி, பரங்கிமலை இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்தும், ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் செயல்பட டிஜிபி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 3 காவல் ஆணையரகங்களின் எல்லையைக் குறிக்கும் இடைக்கால வரைபடங்களின்படி, தாம்பரத்திற்கு வண்டலூர், குரோம்பேட்டை, பள்ளிக்கரணையிலும், ஆவடிக்கு மாதவரம், பூந்தமல்லி, அம்பத்தூரிலும்
துணை ஆணையரகங்கள் செயல்படும்.

தாழம்பூர், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் ஆகியவை பள்ளிக்கரணை துணை ஆணையர் அலுவலகத்தின் கீழ் கொண்டுவரப்படும். சோமங்கலம், பீர்க்கன்காரணை, மணிமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் காவல்நிலைய எல்லைகள், வண்டலூர் துணை ஆணையரகத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

சங்கர்நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், தாம்பரம், சேலையூர் காவல்நிலையங்கள் குரோம்பேட்டை துணை ஆணையரகத்தின் கீழ் கொண்டுவரப்படும். திருவேற்காடு, பூந்தமல்லி, நாசரேத்பேட்டை, மாங்காடு, எஸ்ஆர்எம்சி-போரூர், குன்றத்தூர் காவல்நிலையங்கள் பூந்தமல்லி துணை ஆணையரகத்தின் கீழ் கொண்டுவரப்படும். நகர கடற்கரை தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வரை சென்னை நகரின் ஒட்டுமொத்த பகுதியும் ஏற்கெனவே உள்ள சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் வரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments