நச்சுப் பாம்பைவிட்டுக் கடிக்கச் செய்து மாமியாரைக் கொன்ற மருமகள் - ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

0 2280

நச்சுப் பாம்பை விட்டுக் கடிக்கச் செய்து மாமியாரைக் கொன்றது கொடூரக் குற்றம் என்று கூறி  மருமகளுக்கும் அவளின் கள்ளக்காதலனுக்கும் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், கணவரும் மாமனாரும் வெளியூரில் பணியாற்றும் நிலையில் மாமியாருடன் வீட்டில் இருந்துள்ளார். அந்தப் பெண் கள்ளக்காதலனுடன் அடிக்கடி செல்பேசியில் பேசியதை மாமியார் கண்டித்துள்ளார்.

இதனால் கள்ளக்காதலனிடம் கூறி ஒரு நச்சுப் பாம்பை வாங்கிப் பையில் கொண்டுவந்து இரவில் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரைக் கடிக்கச் செய்து கொன்றுள்ளார். இது தொடர்பான விசாரணையில்  மருமகள், அவள் கள்ளக்காதலன், பாம்பாட்டி என மூவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2018 ஜூனில் நடந்த இந்தக் கொலை வழக்கில் பாம்பாட்டி அப்ரூவர் ஆனார். கொடிய குற்றமிழைக்கப் புதிய உத்தியைக் கையாண்டிருப்பதுடன், சதித் திட்டத்தில் பங்கேற்றுப் பாம்பை வாங்கிக் கொடுத்த கள்ளக்காதலனை ஜாமீனில் விட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments