ஆப்கனில் வறுமையும், பட்டினியும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்
அமெரிக்கப் படைகள் வெளியேறியதில் இருந்து ஆப்கானிஸ்தானில் குழப்பம், வறுமை மற்றும் பட்டினி போன்றவை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டல்லாஸ் நகரை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகை ஒன்றில் எழுதப்பட்டுள்ள கட்டுரையின்படி, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியது அமெரிக்காதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும், ஆப்கன் மத்திய வங்கியின் 9 பில்லியன் டாலர் முடக்கப்பட்டதால் அந்நாட்டில் நெருக்கடி அதிகரித்து வருவதாகவும், பணப்பற்றாக்குறை காரணமாக உண்மையான போரை இனிதான் ஆப்கன் மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments