கிராமத் திருவிழாவில் விருந்துண்ட 51 குழந்தைகள் உள்பட 100 பேருக்கு உடல் நல பாதிப்பு...மருத்துவமனையில் அனுமதி...!
சட்டிஸ்கரில் விழாவின் போது விருந்துண்ட 100க்கும் மேற்பட்டோர் உடல் நல பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்சுலா என்ற கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவை அடுத்து விருந்து பரிமாறப்பட்டது. விஷமாகிய அந்த உணவை சாப்பிட்ட 51 குழந்தைகள் உள்பட பலர் மயங்கி விழுந்தனர்.
அருகில் இருந்த பித்தோரா மருத்துவமனையில் நூற்றுக்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பெரும்பாலோர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தைக் கடந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments