மேற்கு வங்கத்தில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்...!

0 2087

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை நெருங்கி வரும் நிலையில் பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் தங்கத்தால் மெருகூட்டப்படுகின்றன.

பாக்கியாத் என்ற இடத்தில் இரண்டு துர்கா சிலைகள் பந்தலில் திறக்கப்பட்டுள்ளன, அதில் ஒரு சிலைக்கு கண்கள் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு சிலைக்கு தங்கப் புடவை சாற்றப்பட்டுள்ளது.

பூஜைக்குப் பின்னர் இந்தச் சேலை திருமணத்திற்காக காத்திருக்கும் ஏழைப் பெண்ணுக்கு வழங்கப்படும் என சிலை அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் நவராத்திரி விழா இன்றிலிருந்து வரும் 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY