பொது போக்குவரத்தை தினமும் பயன்படுத்தி நாள்தோறும் 30 கி.மீ பயணிக்கும் 'Boji'
துருக்கியில் தெரு நாய் ஒன்று நாள் தவறாமல் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வருகிறது.
போஜி (Boji) என அழைக்கப்படும் இந்த நாய் இஸ்தான்புலில் உள்ள பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் மனிதர்களை போல் தினமும் பயணிக்கிறது. சக பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத போஜி-க்கு மிகப் பெரிய ரசிக பட்டாளம் உண்டு.
இதனால் போஜியின் பேரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைத்தள கணக்குகளில் தினமும் அதனுடன் எடுக்கப்படும் புகைப்படங்களை சக பயணிகள் பகிர்ந்து வருகின்றனர்.
@boji_ist @sultanahmet pic.twitter.com/RNDJjwjzsy
— Kerem Özdoğan (@kerem_ozdogan) October 2, 2021
பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மட்டுமின்றி போரடித்தால் மர்மரா கடலில் உள்ள தீவுகளுக்கு போஜி படகு சவாரி செய்து பொழுதை போக்குகிறது. போஜி-யின் கழுத்தில் Microchip பொறுத்தி அதன் நடமாட்டத்தை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்த போது தினமும் 30 கிலோமீட்டர் பயணிப்பது தெரியவந்தது.
Comments