உக்ரைனில் இரண்டாம் உலகப்போரில் நாஜி படையினரிடமிருந்து தப்பிக்க யூதர்கள் அமைத்த ரகசிய குகைகள் கண்டுபிடிப்பு
உக்ரைனில் இரண்டாம் உலகப்போரில் நாஜி படையினரிடமிருந்து தப்பிக்க யூதர்கள் சிலர் கழிவு நீர் செல்லும் பாதள சாக்கடை அருகே ரகசிய குகைகள் அமைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலான யூதர்கள் நாஜி படையினரால் கொன்று குவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிலர் ரகசிய குகை தோண்டி பதுங்கியதாக வரலாற்று ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.
Lviv நகரில் கண்டறியப்பட்ட 7 மீட்டர் நீள குகையின் ஒருபக்கம் பாதாள சாக்கடையை சென்றடைவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை மையப்படுத்தி 2011-ல் வெளியான 'In Darkness' என்ற போலாந்து திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படத்துகான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
Comments