இந்தாண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு
இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, இரண்டு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த பெஞ்சமின் லிட் (Benjamin List), அமெரிக்காவின் டேவிட் டபுள்யூ.சி.மேக்மில்லன் (David W.C. MacMillan) ஆகியோர் நோபல் பரிசுக்கு தேர்வானதாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் அறிவித்தனர்.
சமச்சீரற்ற வேதியியல் மூலக்கூறுகளை எளிதில் கட்டமைப்பதற்கான புதிய மற்றும் தனித்துவமான கருவியை கண்டறிந்தமைக்காக இருவரும் நோபல் பரிசிற்கு தேர்வானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு இரு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பெரிதும் பயனிக்கும் என்றும் தேர்வுக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
Comments