கலிஃபோர்னியா கடற்கரை அருகே எண்ணெய் குழாயில் கசிவு ; கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை

0 2352
கலிஃபோர்னியா கடற்கரை அருகே எண்ணெய் குழாயில் கசிவு ; கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை

அமெரிக்காவில் தெற்கு கலிஃபோர்னியாவின் கடற்கரை அருகே ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் இறந்த மீன்கள், பறவைகள் கரையொதுங்கியுள்ள நிலையில், கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை அருகே அமைந்துள்ள எண்ணெய் குழாயை கப்பலின் நங்கூரம் சேதப்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

எண்ணெய் குழாயிலிருந்து சுமார் 5 லட்சத்து 72 ஆயிரம் லிட்டருக்கு அதிகமான எண்ணெய் கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஹன்டிங்டன்  கடற்கரையின் தாழ்வான பகுதிகளில் குட்டைகள் அமைக்கப்பட்டு கசிந்த எண்ணெய் சேகரிக்கப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments