புலம்பெயர் தமிழர் நலவாரியம் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு
முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும், அரசு மற்றும் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு 5 கோடி ரூபாயில் “புலம்பெயர் தமிழர் நலநிதி’’உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர் குறித்த தரவுத் தளம் ஏற்படுத்தப்படும் என்றும், வாரியத்தில் பதிவு செய்வோருக்குக் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடு செல்லும் குறைந்த வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் ஆலோசனை பெற வசதியாகக் கட்டணமில்லாத் தொலைபேசி, வலைத்தளம், கைப்பேசி செயலி அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 12ஆம் நாள் "புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாகக்’’ கொண்டாடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments