ராணிப்பேட்டை, வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடியில், திமுக - அதிமுகவினர் இடையே தள்ளு முள்ளு

0 3537

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் குளறுபடிகள், பிரச்சனைகள் காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 92ஆவது வாக்குச்சாவடியில் திமுக - அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

சிப்காட் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், ஜன்னல் வழியாக வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் சின்னத்தை சைகையாக காட்டியதாக கூறி வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதால் அந்த வாக்குச்சாவடியில் பதற்றம் நிலவியது. பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments