உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!

0 12840

உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 10 ஆண்டுகளில் 14சதவீத  பவளப்பாறைகள் அழிந்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக உலகளாவிய பவளப்பாறை கண்காணிப்பு அமைப்பு சார்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை சுமார் 11ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் அளவிலான பவளப்பாறைகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் தமது நிறத்தை இழந்து வெளுக்கத் தொடங்குகின்றன என்றும்  இதன் மூலம் பவளப்பாறைகளின் அழிவைத் தெரிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

பவளப்பாறைகள் அழிந்தால் அதைச் சார்ந்து வாழும் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பவளப்பாறைகள் முழுவதுமாக அழிந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments