சம்பள பாக்கிக்காக காரை திருடிய ஓட்டுநர்...!
சென்னையில், சம்பள பாக்கியை கேட்க சென்ற இடத்தில் வீட்டின் உள்ளே சென்ற முன்னாள் கார் ஓட்டுனர் அங்கிருந்த சொகுசுக் காரை திருடி சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மயிலாப்பூரைச் சேர்ந்த தாரிக் அக்தர் என்பவர் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரை காணவில்லை என ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். காரின் ஜிபிஆர்எஸை ஆய்வு மேற்கொண்டதில் அந்த கார் காட்டுப்பாக்கம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் காரில் தூங்கி கொண்டிருந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், ஜாபர் சாதிக் என்ற அந்த நபர் தாரிக்கின் தந்தையிடம் ஓட்டுனராக பணிபுரிந்தது தெரிய வந்தது. 3 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கி இருந்ததாகவும், அதனைக் கேட்க சென்ற இடத்தில் யாரும் இல்லாததால் காரை ஓட்டிச் சென்றதாகவும் ஜாபர் சாதிக் தெரிவித்தான்.
Comments