சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு - தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

0 14302
சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மதுரவாயல் - வாலாஜா இடையிலான சாலை சீரமைக்கப்பட்டு விட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை அங்குள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என கடந்த 2019 ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கை முடித்து வைத்ததன் மூலம் இனி 100 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்கப் படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments