பூஸ்டர் டோசிற்கு ஐரோப்பிய யூனியனின் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி
நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ளோருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்த ஐரோப்பிய யூனியனின் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.
3-ஆவது டோசாக ஃபைசர் அல்லது மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தலாம் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் பூஸ்டர் டோசை அதிகளவிலான மக்களுக்கு செலுத்துவதை உறுப்பு நாடுகளே முடிவெடுக்கலாம் என்றும் ஐரோப்பிய யூனியன் அனுமதி தந்துள்ளது.
எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளான ஃபைசர், மாடெர்னாவை 2ஆவது டோஸ் செலுத்திய 28 நாட்களுக்கு பிறகு பூஸ்டர் டோசாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், 6 வாரங்களில் தொற்று பாதிப்பு உயரலாம் எனவும், அதன் தொற்று நோய் மையம் எச்சரித்த நிலையில், பூஸ்டர் டோசிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Comments