இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு..
இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வாழ் ஜப்பானியரான ஸ்யூகுரோ மனாபே , ஜெர்மனியை சேர்ந்த க்ளாஸ் ஹேசில்மேன் , இத்தாலியரான ஜியார்ஜியோ பாரிசி ஆகிய மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வானதாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், தேர்வுக்குழுவினர் அறிவித்தனர்.
சிக்கலான இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் காலநிலை, மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை நம்பகத்தன்மையுள்ள வகையில் கண்டறியும் முறைக்காக மனாபே, ஹாசில்மேன் ஆகியோர் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், அணுவிலிருந்து கிரகங்கள் வரை உள்ள இயற்பியல் அமைப்புகளின் ஏற்ற இறக்கங்களை கண்டறிந்தமைக்காக பாரிசிக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
Comments