அக்டோபர் 5 ஆம் தேதி தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும்: வள்ளலார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5ஆம் தேதி, தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என கருணை ஒன்றையே வாழ்கை நெறியாக வாழ்ந்தவர் அருட்பிரகாச வள்ளலார் என தெரிவித்துள்ளார்.
வடலூரில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தர்மசாலையை நிறுவி, அவர் ஏற்றிய அடுப்பு தற்போது வரை அணையாமல் எரிந்த வண்ணம், பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Comments