ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு, கடல் அடியில் குழாய் மூலம் எரிவாயு கொண்டுசெல்லும் திட்டம்...உத்தரவாதம் கேட்கும் ஜெர்மனி

0 2567

ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு கடலுக்கு அடியில் கொண்டுச்செல்லப்படும்  சர்ச்சைக்குரிய இரண்டாவது இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தில், உரிய ஒழுங்குமுறை விதிகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன என உத்தரவாதம் அளிக்கும்படி ஜெர்மனி கேட்டுள்ளது

பால்டிக் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை சுவிட்சர்லாந்தின்  Nord Stream AG என்னும் நிறுவனம் அமைத்துள்ள நிலையில், உத்தரவாதத்தின் அடிப்படையில் எரிவாயு கொண்டுவர அனுமதி வழங்கப்படும் என ஜெர்மனியின் எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தால் ஐரோப்பாவுக்கு ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதி அளவு இருமடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments