உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
பெரு நாட்டில் நடந்த ஐஎஸ்எஸ்ஃஎப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் நாம்யா கபூர் தங்கப்பதக்கம் வென்றார்.
டெல்லி ரஜோரி கார்டன் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியான நாம்யா கபூர், லிமாவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த திறமை வாய்ந்த வீராங்கனை மனு பாக்கர் உள்பட 8 பேரையும் நாம்யா கபூர் வீழ்த்தினார். இவர்களைத் தொடர்ந்து, பிரான்ஸைச் சேர்ந்த கேமிலி ஜெட்ரிஜெவ்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி 36 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
Comments