2024க்குள் ஒரு பில்லியன் டன் நிலக்கரி உற்பத்திக்கு இலக்கு, மத்திய நிலக்கரி அமைச்சகம் தகவல்
2024ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியை அரசு இலக்காகக் கொண்டுள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், நிலக்கரி உற்பத்தி தவிர அண்டை நாடுகளுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்வது ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஏலம் மூலம் ஒதுக்கப்படும் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2020 - 21ம் ஆண்டில் 716 மில்லியன் டன் உற்பத்தி என்பதை 2024க்குள் ஒரு பில்லியன் டன்னாக உற்பத்தி செய்யப்படும் என்றும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments