அரசின் உதவித்தொகை வழங்க கேட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கி வீட்டிற்கு வழியனுப்பிய ஆட்சியர்

0 3140
மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கி வீட்டிற்கு வழியனுப்பிய ஆட்சியர்

சேலத்தில் அரசு உதவித்தொகை வழங்க கேட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சக்கர நாற்காலி வழங்கி, ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்துள்ளார்.

ஓமலூர் அருகே உள்ள டேனிஷ் பேட்டையை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வரதராஜன். பார்ப்பதற்கு சிறுவன் போல தெரியும் இவருக்கு வயது 25. கை, கால்கள் செயலிழந்த இவர், தமிழக அரசின் உதவித்தொகை கிடைக்க வழி கேட்டு தன் தந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார்.

அவர் தவழ்ந்து செல்வதை பார்த்த கலெக்டர், உடனே அவருக்கு சக்கர நாற்காலி வழங்க ஏற்பாடு செய்து, அதில் வரதராஜனை அமரவைத்து தள்ளியபடி ஆம்புலன்சில் ஏற்றி தந்தையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments