வழக்கத்துக்கு மாறாக வேறு திசையை நோக்கி ஓடும் கும்ப்ரே வியகா எரிமலையில் இருந்து வெளிப்படும் தீக்குழம்பு
ஸ்பெயினின் லா பால்மா தீவில் உள்ள கும்ப்ரே வியகா எரிமலையில் இருந்து வெளிப்படும் தீக்குழம்பு வழக்கத்துக்கு மாறாக வேறு திசையை நோக்கி ஓடி வருகிறது.
தொடர்ந்து 15 நாட்களாக குமுறி வரும் கும்ப்ரே வியகா எரிமலையின் வடக்கு பகுதி நேற்று திடீரென சரிந்தது.
இதனால் அதில் இருந்து வெளிப்படும் தீக்குழம்பு திசை மாறி அருகில் உள்ள குடியிருப்புகளை நோக்கி வேகமாகப் பாயத் தொடங்கியது. இது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
Comments