பண மோசடிப் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தின் 3வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி..
மதுரையில், பண மோசடிப் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தின் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்த பிரவீனா என்பவர், ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் ஈட்டி தருவதாக கூறி 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக, மதுரை எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி ராம்குமார் போலீசில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் ராம்குமார் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக பிரவீனா கடம்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் ராம்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால், தானும் தன் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாலும், பிரவீனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.
Comments