7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை
7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது என பொறியியல் கல்லூரிகளை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்பதாக அறிவித்தது.
இந்நிலையில் உள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லும் போது அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனை அடுத்து, அவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.
7 புள்ளி 5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 972 மாணாக்கர்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments