காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...
குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டறிய காவல்துறையின் பயன்பாட்டுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
face Recognition software எனப்படும் இந்த மென்பொருள், தனிநபரின் புகைப்படங்களை காவல் நிலையங்களில் Crime and Criminal Tracking Network -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்படத் தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறியப் பயன்படுகிறது.
குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களைத், தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம்.
இச் செயலியை பயன்படுத்தி காவல் அலுவலர்கள் ரோந்து பணி, வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது, சந்தேகத்துக்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப் பின்னணியும் எளிதாக தெரிந்து கொண்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
Comments