சைகோவ் டி மருந்தை மக்களுக்குச் செலுத்துவது இன்னும் 2 வாரத்தில் தொடங்கும்...என்.கே.அரோரா தகவல்

0 3026

சைடஸ் கடிலாவின் சைகோவ் டி தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்துவது இன்னும் இரு வாரக்காலத்தில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா எதிர்ப்பாற்றலுக்கான தேசியத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுத் தலைவர் என்.கே.அரோரா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சைடஸ் கடிலாவின் சைகோவ் டி தடுப்பு மருந்துகள் இமாச்சலத்தில் உள்ள ஆய்வகத்துக்குத் தரப் பரிசோதனைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறுவதாகவும் அக்டோபர் 15 - 20 வாக்கில் இந்த மருந்தை மக்களுக்குச் செலுத்துவது தொடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஊசியில்லாமல் உடலில் செலுத்தும் இந்த மருந்தை 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரப் பயன்பாட்டுக்குச் செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments