காஷ்மீரில் ரூ.25 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்
காஷ்மீரில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள உரி செக்டார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்ற போது, பாகிஸ்தான் லட்சினையுடன் கூடிய பொதி ஒன்றினைக் கண்டுபிடித்தனர்.
அதனைச் சோதனையிட்டபோது, அதனுள் 25 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு 25 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments