தீபாவளிப் பண்டிகை - அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலமாகவும், டிஎன்எஸ்டிசி என்கிற செல்போன் செயலி வழியாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், தீபாவளி பண்டிகைக்கு சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
Comments