நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 22,842 பேருக்கு புதிதாகத் தொற்று
இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரம் பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதுவரை பெருந்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் நேற்று மட்டும் 13 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டதுடன் 121 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments