ஐ.பி.எல்: சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

0 3097

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடின.  டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் ஆடத் தொடங்கியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது.  அந்த அணி 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு  119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments