சைகோவ் டி தடுப்பு மருந்து விலை ரூ.1900 என முன்மொழிந்த சைடஸ் கடிலா ; விலையை குறைக்க அரசு பேச்சுவார்த்தை
சைடஸ் கடிலா நிறுவனம் சைகோவ் டி கொரோனா தடுப்பு மருந்தின் விலை 1900 ரூபாய் என முன்மொழிந்துள்ளதாகவும், விலையைக் குறைக்க அரசு பேச்சு நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்ஏ அடிப்படையிலான சைகோவ் டி தடுப்பு மருந்தை ஊசி இல்லாமல் ஜெட் இன்ஜெக்டர் என்கிற கருவியால் உடலில் செலுத்த முடியும். முதல் தவணை செலுத்திய 28ஆவது நாளில் இரண்டாவது தவணையும், 56ஆவது நாளில் மூன்றாவது தவணையும் செலுத்த வேண்டும்.
இந்தத் தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் விலையைக் குறைக்க அரசு பேச்சு நடத்தி வருவதாகவும் இந்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments