புதிய மின்சார விதிகளை அறிவித்த மின்துறை அமைச்சகம்...!
மின்சார பரிமாற்ற முறை திட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற கட்டணங்களை பெறுவதற்கான விதிகளை மத்திய மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மின்சார பரிமாற்ற நெட்வொர்க்கை எளிதாக அணுகுவதற்கும், பரிமாற்ற அமைப்பு திட்டத்தை மாற்றியமைக்கவும் இந்த விதிகள் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில மின் விநியோகம் மற்றும் பரிமாற்ற நிறுவனங்கள், தங்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடலை தீர்மானிக்க புதிய விதிகள் அதிகாரமளித்துள்ளது.
மேலும், மாநிலங்கள் குறுகிய கால மற்றும் நடுத்தர கால ஒப்பந்தங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க முடியும் என்றும் மின்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Comments