டி.எஸ்.பி போல் நடித்து பண மோசடி செய்தவன் கைது...!
கடலூரில் போலீஸ் டி.எஸ்.பி போல நடித்து ஊர்காவல் படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவன் கைது செய்யப்பட்டுள்ளான். பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்த கெளதம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஊர்காவல் படையில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி தருவாத கூறி பண்ருட்டியை சேர்ந்த தீர்த்தமலை மற்றும் ஸ்ரீநாத்திடம் முன்பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
பிறகு ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் அதன் உரிமையாளரிடம் காவல்துறை அதிகாரி போல தன்னை காட்டிக்கொண்டு போலியான பணி நியமன ஆணையை தயாரித்து பாதிக்கப்பட்டவர்களிடம் காட்டி எஞ்சியப்பணத்தை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் பூகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கெளதமை கைது செய்ததுடன், அவனிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு டி.எஸ்.பி சீருடை , பணி நியமன ஆணை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
Comments