தேனியில் அரசு நிலத்தை முறைகேடு செய்து பட்டா பெற்றதால் நில அளவையர் பணியிடை நீக்கம்
தேனி மாவட்டத்தில் 2 ஏக்கர் அரசு நிலத்தை முறைகேடு செய்து பட்டா பெற்றதால் நில அளவையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வருபவர் சக்திவேல். 3 ஆண்டுகளுக்கு முன் அவர், பெரியகுளத்தில் பணியாற்றிய போது, அரசு நிலத்தை முறைகேடு செய்து, மனைவி பெயரில் பட்டா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்த விசாரணையில் சக்திவேல் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வேறு ஏதேனும் நில முறைகேடு செய்துள்ளாரா என தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments