ஸ்பெயினில் தொடர்ந்து தீப்பிழம்பை வெளியேற்றி வரும் கும்ப்ரே வைஜா எரிமலை ; பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
ஸ்பெயினில் லா பால்மா தீவின் கும்ப்ரே வைஜா எரிமலையிலிருந்து தீப்பிழம்பு தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்ற மாதம் 19 ஆம் தேதி முதல் உக்கிரமாக தீப்பிழம்பு, சாம்பல் மற்றும் கரும்புகையை எரிமலை கக்கி வருகிறது. எரிமலைக்கு அருகே உள்ள எல் பாஸோ, டஸாகோர்டெ உள்ளிட்ட நகரங்களில் வீட்டுக்குள்ளேயே மக்கள் இருக்கும்படி போடப்பட்டிருந்த உத்தரவு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், எரிமலை தொடர்ந்து தீபிழம்பை உமிழ்ந்து வருவதால் குழந்தைகளும் , பெரியவர்களும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Comments