சிலி நாட்டில் குடியேறும் நோக்கத்துடன் வரும் பிற நாட்டவர்...!
தென்னமெரிக்க நாடான சிலியில், பிற நாடுகளில் இருந்து குடியேறும் நோக்கத்துடன் வருபவர்களை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
தலைநகர் சான்டியாகோவில் குடியேற்றத்துக்கு எதிரானவர்கள் நடத்திய போராட்டம் போலீசாருடன் மோதலில் முடிந்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தென்னமெரிக்க நாடுகளிலேயே செல்வந்த நாடாக கருதப்படும் சிலிக்கு, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் படையெடுத்து வரும் நிலையில், அவர்களின் வருகையை கட்டுப்படுத்த சிலி அரசு முயற்சித்து வருகின்றது.
Comments