மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி

0 4427
மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி

மேற்கு வங்கத்தில் பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளரைவிட 58 ஆயிரத்து 832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

மேற்குவங்க சட்டமன்ற பொதுத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் தோற்ற மம்தா பானர்ஜி, திரிணாமூல் காங்கிரஸ் இருநூற்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வென்றதால் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஆறு மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் தான் பதவியில் நீடிக்க முடியும் என்கிற கட்டாயத்தில் பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். செப்டம்பர் 30ஆம் நாள் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றிருந்த மம்தா பானர்ஜி, வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளரைவிட 58 ஆயிரத்து 832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இதேபோல் சம்சேர்கஞ்ச், ஜங்கிப்பூர் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

தனது வெற்றி குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி, வாக்களித்த மக்களுக்கும், ஆறு மாதக் காலத்துக்குள் தேர்தல் நடத்திய ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மம்தா பானர்ஜிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க மக்கள் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு மீண்டும் சான்றளிக்கும் வகையில் இந்தப் பெருவெற்றி திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments