இன்றைய ஐ.பி.எல். தொடரில் இரண்டு லீக் ஆட்டங்கள்

0 2840

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணியுடன் பஞ்சாப் அணி மோத உள்ளது.

கடந்த இரு ஆட்டங்களில் மும்பை, ராஜஸ்தான் அணிகளை தோற்கடித்த பெங்களூரு, பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இன்றைய போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதேபோல் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் கொல்கத்தா அணியை ஐதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது. புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ள கொல்கத்தா அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் நோக்கில் விளையாட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments