டெக்சாஸ் மாகாணத்தின் கருக்கலைப்பு கட்டுப்பாட்டு சட்டத்தை எதிர்த்து, வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணி

0 2542

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள கருக்கலைப்பு கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பேரணி நடத்தினர்.

டெக்சாஸ் மாகாணத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின் படி, கருத்தரித்து 6 வாரங்கள் நிறைந்த பிறகு கருவைக் கலைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கும் டெக்சாஸை சேர்ந்த பெண்கள் பிற மாகாணங்களுக்கு சென்று கருகலைப்பு செய்துகொள்ளும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில், பெண்களின் தனிஉரிமையை பாதுகாக்க வலியுறுத்தி வாஷிங்டனில் கூடிய ஆயிரக்கணக்கான பெண்கள் உச்சநீதிமன்ற வளாகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments