ஆட்கொல்லிப் புலியைச் சுட்டுப் பிடிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் வழக்கு
நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லிப் புலியைச் சுட்டுப் பிடிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியில் இந்த புலி ஏற்கனவே 4 பேரை கொன்றதுடன். 30 மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியதால், புலியை சுட்டுக் கொல்வது உள்பட அதை வேட்டையாடுவதற்கான உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார்நீரஜ் பிறப்பித்துள்ளார்.
இதை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Comments