வீணான ருதுராஜ் கெய்க்வாட்டின் சதம்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

0 3503

ஐபிஎல் போட்டித்தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீசியது. இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 60 பந்துகளில் 101 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியினர் ஆடத்தொடங்கினர். தொடக்கம் முதலே அதிரடியுடன் அந்த அணி வீரர்கள் ஆடியதால் ரன்கள் மளமளவென குவிந்தன. இறுதியில் அந்த அணியினர் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments