நீட் தேர்வர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

0 4004
நீட் தேர்வர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

நீட் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்ப படிவத்தில் சாதி உள்ளிட்டத் தகவல்களை திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் சில நாட்களில் வெளியாக உள்ளன.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதியவர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தில் சாதி, பாலினம், மின்னஞ்சல் முகவரி, பிரிவு, உட்பிரிவு, கல்வித்தகுதி உள்ளிட்டத் தகவல்களைத் திருத்தம் செய்ய இரண்டாம் முறையாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திருத்தம் செய்ய விரும்புவோர் இம்மாத 10-ம் தேதிக்குள் neet.nta.nic.in இணையதளத்தின் மூலம் திருத்தங்களை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments