வான்பரப்பின் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீன விமானங்கள் - தைவான் குற்றச்சாட்டு
வான்பரப்பின் பாதுகாப்பு மண்டலத்திற்குள், அணுகுண்டுகளை வீசும் திறன் பெற்ற விமானங்கள் உள்ளிட்ட 38 சீன போர் விமானங்கள் நுழைந்ததாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது.
சீனாவின் ஜே-16 ரகத்தை சேர்ந்த 38 போர் விமானங்கள், தங்களது எல்லைக்கு அருகே, வான் பரப்பின் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இரு குழுக்களாக நுழைந்ததாகவும், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஜெட் விமானங்களை அனுப்பி அவற்றை அங்கிருந்து விலகிப்போகச் செய்ததாகவும் தைவான் அரசு கூறியுள்ளது.
பாதுகாப்பு மண்டலம் என்பது, ஒரு நாட்டின் வான்பரப்புக்கு வெளியே அமைந்தது என்றாலும், அங்கு நுழையும் அந்நிய விமானங்களை கண்காணித்து, கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளுக்கு உரிமை உண்டு. இதனிடையே தைவான் அரசின் குற்றச்சாட்டு குறித்து சீன அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.
Comments