அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் ஆப்கான் மக்கள்...!

0 3148

ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் செல்வதால் காபூல் நகரப் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியுதவிகள் நிறுத்தப்பட்டன. மேலும் அரிசி, மைதா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை  உயர்ந்ததால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஏராளமானோர் காபூல் நகரில் இருந்து பேருந்துகள் மூலம் மசார் இ ஷெரிப் நகருக்குச் சென்று அங்கிருந்து அண்டை நாடான ஈரானுக்கு நடந்தே செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments